எல்லைத்தாண்டி மீன்பிடித்த 43 இந்திய மீனவர்கள் கைது!
Sunday, December 19th, 2021
யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கு அருகே சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், இவ்வாறு சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, 6 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வந்ததன் பின்னர் காங்கேசன்துறை இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
போக்குவரத்து தொடர்பில் விரைவில் புதிய நடைமுறை !
மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் உடன்படிக்கை..?
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நாட்டின் இறையாண்மையை இழிவு படுத்தும் சாராருக்கு இடைஞ்சலாகவே இருக்கும் –...
|
|
|


