சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட சீருடைத் தொகுதி நாட்டை வந்தடைந்தது – பாடசாலை சீருடைகள் மார்ச் மாதத்துக்குள் விநியோகிக்கப்படும் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!
Saturday, January 14th, 2023
சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பாடசாலை சீருடைகள் நாட்டை வந்தடைந்துள்ளது.
4.24 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாடசாலை சீருடைகள் 20 40 அடி கொள்கலன்கள் நாட்டை வந்தடைந்ததாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனாவினால் வழங்கப்பட்ட இச்சீருடைத் தொகுதி இன்று கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான மாணவர்களின் தேவையில் 70% உள்ளடக்கத்தை முதல் தொகுதி உள்ளடக்கியதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான சீருடைகள் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த பாடசாலை சீருடைத் தேவையில் 70 வீதத்தை பூர்த்தி செய்ய சீன அரசாங்கம் இணங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106