இலங்கைக்கு இந்தியா அனைத்து சந்தர்ப்பங்களிலும் முழுமையான உதவிகளை வழங்கும் – செந்தில் தொண்டமானிடம் இந்திய நிதி அமைச்சர் தெரிவிப்பு!
Thursday, January 12th, 2023
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் மத்திய பிரதேசம், இன்டோரில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் இலங்கையின் பொருளாதார விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த தருணத்தில் இந்தியா வழங்கிய உதவிகளுக்கு இதன்போது செந்தில் தொண்டமான் நன்றிகளை தெரிவித்தார்.
எதிர்கால ஏற்படப்போகும் பொருளாதார சவால்கள் மற்றும் அதனை எதிர்கொள்வது குறித்தும், தொடர்ந்தும் இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்க வேண்டும் எனவும் இதன் போது இந்திய நிதி அமைச்சரிடம் செந்தில் தொண்டமான் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கு இந்தியா அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனது முழுமையான உதவிகளை வழங்கும் எனவும் பங்களாதேஷிற்கு இந்தியா வழங்கிய முழுமையான உதவியால் இன்று அந்தநாடு முன்னேற்றம் அடைந்து வருவது போல் இலங்கையும் முன்னேற்றமடைய வேண்டும் என இந்திய நிதி அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106