நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைக்கப்படுகின்றன!
Thursday, January 12th, 2023
லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 240 ரூபாய்க்கும், உள்ளூர் சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 5 ரூபாவினால் 220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 16 ரூபாயினால் குறைக்கப்பட்டு 189 ரூபாய்க்கும், நாட்டு அரிசி ஒரு கிலோகிராம் 7 ரூபாய் குறைக்கப்பட்டு 198 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
Related posts:
19ஆம் நூற்றாண்டு அரச வாள் ஜனாதிபதி மைத்திரிக்கு ரஷ்ய ஜனாதிபதி அன்பளிப்பு!
வானிலை தொடர்பில் முன்னறிவிப்பு!
வரலாற்றுப் புகழ் பெற்ற செல்வச்சந்நியானின் தேர் திருவிழா இன்று!
|
|
|


