கடந்த பருவ காலங்களில் உரங்களை விற்பனை செய்து 10.05 பில்லியன் ரூபா வருமானத்தைவிவசாய அமைச்சு ஈட்டியுள்ளது – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, January 12th, 2023

உரங்களை விற்பனைசெய்து பெறப்பட்ட பணத்தில் இருந்தே அரச பணியாளர்களுக்கான டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்பட்டதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாயத் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்..

விவசாய அபிவிருத்தி திணைக்களம் கடந்த பருவ காலங்களில் யூரியா உரங்கள் மற்றும் ஏனைய உரங்களை விற்பனை செய்து 10.05 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த பணம் திறைசேரிக்கு அனுப்பப்பட்டதாகவும், கடந்த டிசம்பரில் அந்த பணத்தில் ஒரு பகுதியை அரச பணியாளர்களுக்கு, உரிய சம்பள கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் பயன்படுத்தியதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106