இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

Tuesday, January 10th, 2023

இந்தோனேசியாவில், தனிம்பார் தீவுகளில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி இன்று (10) அதிகாலை 2.47 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக இந்தோனேசிய பேரிடர் முகாமைத்துவம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், கடல் மட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படாததால், சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நான்கு அதிர்வுகள் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது வடக்கு அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தின் முழு அளவு இன்னும் மதிப்பிடப்பட்டு வருவதாகவும் இந்தோனேசிய பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106