யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தை பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைப்பார் – ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவிப்பு!

Tuesday, January 10th, 2023

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மத்திய நிலையத்தினை பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளதோடு கலாசார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைக்க உள்ளதாகவும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்,

தேசிய சுதந்திர தின நிகழ்வு தொடர்பில் இடம்பெறுகின்ற முன்னேற்பாடு குழு கூட்டத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

இம்முறை 25 வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தொடர்பான முன்னேற்பாட்டு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாக இடம் பெறுகின்றது.

பெப்ரவரி மாதம் 11 ம் திகதிஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்போடு இலங்கையின் 25 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அது தொடர்பான முன்னேற்பாட்டு குழு கூட்டம் இன்றைய தினம் ஜனாதிபதியின் மேல திக செயலாளர் இளங்கோவன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

குறித்த முன்னேற்பாட்டு குழு கூட்டத்தில் முப்படைகளின் பிரதிநிதிகள் துறை சார் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலக உத்தியோத்தர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106