மின் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி – அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வலியுறுத்து!
Tuesday, January 10th, 2023
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் மீள் பரிசீலனை செய்யும் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மீள் பரிசீலனையின் போது மீண்டும் மின் கட்டணம் குறைவடைவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான யோசனை நேற்று மாலை கிடைக்கப்பெற்றதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
இந்நிலையில்
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பாக்க அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106