சூடானில் முற்றிலும் பெண் வீராங்கனைகளைக் கொண்ட இந்திய அமைதிப்படை!

Saturday, January 7th, 2023

ஐ.நா. அமைதிப்படையில் உலகின் பெரும்பாலான நாட்டின் ஆண், பெண் வீரர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இவர்களுடைய முக்கியமான வேலை, அமைதியற்ற சூழ்நிலை நிலவும் நாடுகளில் மக்களுக்கு உதவி புரிவதாகும்.

இந்தியா ஐ.நா. அமைதிப்படைக்கு ஏராளமான வீரர்களை அனுப்பியுள்ளது. பெண் வீராங்கனைகள் ஐ.நா. பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சூடானில் உள்ள அபெய்க்கு ஐ.நா. பணிக்காக ஒரு படைப் பிரிவு செல்கிறது. இது முழுவதும் பெண் வீரர்கள் கொண்ட படைப் பிரிவு ஆகும். இதில் இடம் பிடித்துள்ள அனைவரும் இந்தியப் பெண் வீராங்கனைகளாவர்.

இதன் மூலம் 2007-க்குப் பிறகு ஒரு படைப்பிரிவாக மிகப்பெரிய அளவில் பணியில் ஈடுபடும் பெருமையை இந்திய பெண் வீராங்கனைகள் பெறுகின்றனர். இதற்கு முன் 2007-ல் லைபீரியாவில் அமைதிப்படை பிரிவில் அனைவரும் பெண் வீரர்களாக இடம் பிடித்திருந்தனர். இந்திய பெண் படைப்பிரிவு இன்றிலிருந்து அபேயில், ஐ.நா.வின் இடைக்கால பாதுகாப்பு படையில் ஒரு குழுவாக செயற்பட உள்ளனர்.

சூடானில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மனிதாபிமான செயல்களுக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தக் குழு பணியில் ஈடுபட உள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106