யாழ்ப்பாணம் – கொழும்பிற்கிடையில் மேலும் 33 பஸ்கள் சேவையில் – வடமாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை தெரிவிப்பு!

Tuesday, January 3rd, 2023

யாழ்ப்பாணம் கொழும்பு பஸ் சேவையில்  மேலதிகமாக 33 பஸ்கள் சேவையில் ஈடுபட உள்ளதாக வட மாகாண வீதி  பயணிகள்போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை இடைநிறுத்தப் படவுள்ளத்தப்பட்டுள்ளது வவுனியா அனுராதபுரம் பாதை திருத்த வேலை காரணமாக குறைந்தது ஆறு மாதங்களுக்கு இந்த திருத்த வேலைகள் நடைபெறஇருப்பதினால் புகையிரத சேவையானது இடைநிறுத்தப்படுகின்றது .

அந்த வகையில் வடக்கு ஆளுநர்  வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைதேசிய போக்குவரத்து ஆணைக்குழு புகையிரத திணைக்களத்தினருடன் இணைந்து  சில மாற்று நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இலங்கை போக்குவரத்து சபை அதிகார சபை புகையிரத திணைக்களம் வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையுடன்  இணைந்து என்ன மாற்றங்களை செய்யலாம் என்பதை தீர்மானித்து மூன்று வகையான தீர்மானங்களை  எடுத்திருக்கின்றோம்.

யாழ்ப்பாணத்திலிருந்து செல்கின்ற யாழ் ராணி தற்பொழுது  முறிகண்டி வரை பயணிக்கின்றது வவுனியா வரை செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது

வவுனியாவில் இருந்து அனுராதபுரம் சென்று புகையிரதத்தில் கொழும்பு செல்ல விரும்புவோருக்காகவவுனியா அனுராதபுரத்திற்கு 20 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபட உள்ளன.

தனியார் போக்குவரத்து சேவை மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் அந்தந்த மாவட்டத்தில் இருந்து நேரடியாக அனுராதபுரத்திற்கு சென்று அங்கே பயணிகளை செல்லக்கூடியவாறு ஒழுங்கு செய்திருக்கின்றோம்.

நேரடியாக பஸ்களிலே கொழும்புக்கு செல்லக்கூடிய வாறான ஏற்பாடுகளும் செயற்படுகின்றது குறிப்பாக நேரடியாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பல குளிரூட்டப்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன.

தற்பொழுது 38 பஸ்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடியாக கொழும்பிற்கு சேவையில் ஈடுபடுகின்றன அவைகள் தங்களுக்கு ஏற்ற புக்கிங் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அதை விட மேலதிகமாக 33 குளிரூட்டப்பட்ட பஸ்கள் இருக்கின்றன அந்த பஸ்களும் தற்போது கடந்த கால கொரோனா மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சேவைகள் ஈடுபட வில்லை அந்த 33 பஸ்களையும் மீண்டும் சேவையில் ஈடுபடுமாறு நாங்கள் அதனோடு தொடர்புடையவர்களை நாங்கள் கோரியுள்ளோம்..

எனவே உயர்ந்த சேவை நிறுத்தப்பட்டாலும் பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவைகள் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு முயற்சிக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது   

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106