அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோர்களினால் பாடசாலை நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டம்!

Tuesday, January 3rd, 2023

யாழ் – வரணி கரம்பைக்குறிச்சி அமெரிக்க மிஸன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோர்களினால் பாடசாலை நுழைவாயிலை மறித்து  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை பாடசாலைக்கு மாணவர்கள் எவரும் சமூகமளிக்காத நிலையில் ஆசிரியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமுகமளித்திருந்தனர்.

பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்ட பெற்றோர் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலை அதிபர் ஏழு வருட நியமனத்தில் பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட நிலையில் மூன்று வருடத்தில் திடீரென அதிபரை இடமாற்றுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

திடீர் இடமாற்றத்திற்கான காரணத்தினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என நேற்றைய தினம் பெற்றோர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்ட நிலையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தினை ஈடுபட்டனர்.

அதிபர் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரி பெற்றோர்களினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எதுவித நடவடிக்கையும் செய்யவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் உரிய பதில் கிடைக்கும் வரை தொடர் போரட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106