இன்றைய நாளுக்கான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Tuesday, January 3rd, 2023

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் இன்று (3) சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான காலநிலை காணப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாலை வேளையில் குளிரான காலநிலை எதிர்பார்க்கப்படுவதுடன் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் பனிமூட்டம் காணக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணிக்கு 20-30 கிலோமீற்றராக வீசக்கூடும்.

அத்துடன், மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையும், மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையும் கடற்கரையை அண்மித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோமீற்றராக வீசக்ககூடும் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106