கடந்த ஆண்டு இலங்கைக்கு மில்லியன் டொலருக்கும் அதிகமான புதிய உதவிகளை அமெரிக்கா வழங்கியதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் அறிவிப்பு!

Sunday, January 1st, 2023

2022ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கைக்கு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமான புதிய உதவிகளை அமெரிக்கா வழங்கியதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய உதவிகள், இலங்கையில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் பாடசாலை மதிய உணவுகளுக்கான நிதி, சிறு விவசாயிகளுக்கு உரம் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பண உதவி உள்ளிட்ட மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதாகவும் அவர் தமது ட்வீட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கான கடன்கள், பயிற்சிகள் மற்றும் உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.

நெருக்கடியான காலங்களில் அவர்கள் அதிக சுமையை எதிர்கொள்வதன் காரணமாகவே அந்த உதவி வழங்கப்பட்டது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106