தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஆணைக்குழுவிற்கு கிடையாது – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Friday, December 30th, 2022
தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஆணைக்குழுவிற்கு கிடையாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.பத்திரண தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அரசியல் களத்தில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன.
தேர்தலை பிற்போட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திரை மறைவில் இருந்து கொண்டு செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
கருத்து சுதந்திரம் அனைவருக்கும் பொறுப்பாக்கப்பட்டுள்ளதால் அனைவரது கருத்துக்களையும் ஏற்றுக்கொள்வதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.பத்திரண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106