ஆசிய அபிவிருத்தி வங்கி 8 பில்லியன் நிதியுதவி – இன்றுமுதல் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலிடும் பணிகள் ஆரம்பம்!
Thursday, December 29th, 2022
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நாட்டின் சகல விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட 8 பில்லியன் ரூபா நிதியை விவசாயிகளின் வங்கி கணக்கில் வைப்பிலிடும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இந்தமுறை பெரும்போகத்தில் 8 இலட்சம் ஹெக்டெயர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதில் 7 இலட்சத்து 60 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்பில் தற்போது வரை நெல் பயிரிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையிலான விவசாய குடும்பங்களின் எண்ணிக்கை 1.2 மில்லியனாகும் என்பதுடன், கடந்த பெரும்போகத்தின் அறுவடையில் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 8 பில்லியன் ரூபா இலங்கைக்கு வழங்கப்பட்டது.
இதன்படி, ஒரு ஹெக்டெயர் நிலப்பரப்பை கொண்ட விவசாயிகளுக்கு 10,000 ரூபாவையும், 2 ஹெக்டெயர் நிலப்பரப்பை கொண்டோருக்கு 20 000 ரூபாவையும் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலிடுமாறு விவசாய அமைச்சர் ஆலோசனை வழங்கியிருந்தார்.
இன்றை தினம் அதற்கான செயற்பாடுகள் விவசாய அமைச்சில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106