அரச சேவையை முறையான முறையில் நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு!

Monday, December 26th, 2022

அரச சேவையை முறையான முறையில் நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்கள் 60 வயதில் ஓய்வுபெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய இவ்வருட இறுதியில் பெருமளவிலான அரச உத்தியோகத்தர்கள் ஓய்வுபெறவுள்ள நிலையில் அரச உத்தியோகத்தர்களை சமநிலைப்படுத்தும் நோக்கில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. .

பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழுவில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

60 வயதை பூர்த்தி செய்யும் அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு காலத்தின் போது அரச சேவையில் ஏற்படும் பணியாளர் வெற்றிடங்கள் குறித்தும் உரிய குழு கவனம் செலுத்தி, அதற்காக பணியாளர்களை இணைத்துக் கொண்டால், அது தொடர்பான பரிந்துரைகளையும் மேற்படி குழு முன்வைக்கப்படவுள்ளது.

குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106