நாரம்மலயில் 3 பெண்களின் உயிர்களைக் காவு கொண்ட வாகனம்!

Wednesday, December 21st, 2022

குருணாகலிலிருந்து நாரம்மல நோக்கிச் சென்ற வேனொன்று நாரம்மல, பெதிகமுவ சந்தி என்ற இடத்தில் பேருந்துக்காக வீதியோரத்தில் காத்திருந்த மூன்று பெண்கள் மீது மோதியதில் 3 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

நாரம்மலை நோக்கிச் சென்ற வேன், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் இருந்த வடிகால் பாலத்தில் மோதி, வீதியில் முன்னோக்கிச் சென்று, அருகில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த மூன்று பெண்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் மூன்று பெண்கள் பலத்த காயமடைந்து நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு ஒரு பெண் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என நாரம்மல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் –

குருணாகலிலிருந்து பயணித்த இந்த வேன் வீதியில் நின்ற பெண்கள் மீது மோதி, அருகில் உள்ள வயல்வெளிக்குள் இழுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் விபத்தில் உயிரிழந்த பெண்கள் பெதிகமுவ, நாரம்மல பகுதியை சேர்ந்த 56, 59 மற்றும் 61 ஆகிய வயதுடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106