சிறுவர்களை போதைக்கு அடிமையாக்க இரகசிய திட்டம் – பெற்றோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

Saturday, December 17th, 2022

நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு விருந்துபசார வைபவங்கள் நடத்தி ஐஸ் போதைப்பொருளை பல்வேறு தரப்பினருக்கு அறிமுகப்படுத்தும் இரகசியத் திட்டமொன்று போதைப் பொருள் கடத்தல்காரர்களால் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த இரகசிய வேலைத்திட்டத்தின் முதல் இலக்கு பாடசாலை மாணவர்களென தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விருந்தில் புதிய உணவு பானங்களை பருகி பார்க்குமாறு புதிதாக வருபவர்களிடம் ஐஸ் போதை பொருளுக்கு அடிமையான சிறுவர்கள் அல்லது பெரியவர்கள் இதனை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிடைத்துள்ள தகவல்களுக்கமைய, வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சிறுவர்களை அழைத்து வரும்போது மிகவும் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106