கட்டாய ஓய்வு வயதெல்லை திருத்தம் – இடைக்கால விதிகளுடன் வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
Thursday, December 15th, 2022
வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லையை திருத்தம் செய்வதற்கான இடைக்கால விதிகளுடனான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அரச பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அரச பணியாளர்களது கட்டாய ஓய்வு வயதெல்லையை நடைமுறைப்படுத்தும் போது, வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களுக்கு விலக்களிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமைய, அரச பணியாளர்களது கட்டாய ஓய்வு வயதை 60ஆக குறைத்து வர்த்தமானி அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக விசேட வைத்தியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதி பேராணை மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 25 ஆம் திகதி வரையில் இந்த நடைமுறைக்குள் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை உள்ளீர்க்க வேண்டாம் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106