டெஸ்ட் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விடைபெறுகின்றார் கேன் வில்லியம்ஸ்ன் – நியூசிலாந்தின் புதிய அணித் தலைவராக டிம் சவுதி நியமனம்!
Thursday, December 15th, 2022
நியூசிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் கேன் வில்லியம்சன், டெஸ்ட் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அதன்படி அந்த பொறுப்பு டிம் சவுதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேன் வில்லியம்சன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் எஞ்சிய போட்டிகளுக்கு தலைவராக தமது பொறுப்பை நிறைவேற்ற மாட்டார், இருப்பினும் அவர் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் தொடர்பான தகவலுடன் நியூசிலாந்து கிரிக்கெட் வில்லியம்சனின் பதவி விலகலை அறிவித்தது.
புள்ளிகளின் அடிப்படையில் நியூசிலாந்தின் கிரிக்கெட் வரலாற்றில் வில்லியம்சன் சிறந்த டெஸ்ட் தலைவராக கருதப்படுகிறார்.
மேலும் அவரது தலைமையில் 40 போட்டிகளில் 22 வெற்றி போட்டிகள் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 8 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளதுடன், 10 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
2021 இல் சௌதாம்ப்டனில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்துமுதல் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கு அணியை வழிநடத்தியதில் கேன் வில்லியம்ஸன் பெரும் பங்குவகித்தமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106