ராஜபக்சவை பழிவாங்க நினைப்பவர்கள் நாட்டை அழிக்காமல் முடிந்தால் ஹம்பாந்தோட்டையில் என்னை தோற்கடியுங்கள் – அரகலய செயற்பாட்டாளர்களுக்கு நாமல் ராஜபக்ச சவால்!

Monday, December 12th, 2022

ராஜபக்சவை பழிவாங்கும் நோக்கில் நாட்டை அழிக்காமல் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு தன்னை தோற்கடிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரகலய செயற்பாட்டாளர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.

நேற்று யு டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் , எந்தவொரு கட்சியும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் ஆசியுடன் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்றார்.

கடந்த 30 வருடங்களில் புலிகள் நாட்டுக்கு செய்ததை அரகலய செயற்பாட்டாளர்கள் இப்போது செய்து வருகின்றனர்.

கொவிட்-19 பொருளாதார பாதிப்பில் இருந்து நாடு மீள முயட்சித்து வருகிறது. இவ்வாறான தருணத்தில் அரகலய செயற்பாட்டாளர்கள் நாட்டை மேலும் சீரழித்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் அப்படி ஒரு விஷயத்தை அனுமதிக்க மாட்டோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னரும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதியாக இருப்பதற்கான நியாயமான மக்கள் சக்தி இல்லை என அரகலய செயற்பாட்டாளர்கள் கோஷம் எழுப்புகின்றனர். அரசியலமைப்பைப் பற்றி எந்த அறிவும் இல்லாமல் அவர்கள் அவ்வாறு கூறுவதை இது காட்டுகிறது.

ராஜபக்ஷக்கள் இந்த நாட்டையும் மக்களையும் நேசிக்கிறார், எந்த சக்தியாலும் இதை மாற்ற முடியாது. ராஜபக்சவை பழிவாங்க நினைப்பவர்கள் நாட்டை அழிக்காமல் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு முடிந்தால் என்னை தோற்கடிக்கட்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106