இழப்பீட்டு பணியகம் ஊடாக ஆயிரத்து 753 குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!
Wednesday, December 7th, 2022
இழப்பீட்டு பணியகம் ஊடாக ஆயிரத்து 753 குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், – “காணாமல்போனோர் அலுவலகத்தின் பணிகளை வேகமாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறுதிப்படுத்தப்பட்ட ஆயிரத்து 653 ஆவணங்கள் இதுவரை எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
அத்துடன், இழப்பீடு தொடர்பான விசாரணைகளின் பிரகாரம் ஆயிரத்து 753 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
3 ஆயிரத்து 320 ஆவணங்களுக்கு (குடும்பங்களுக்கு) இழப்பீடு வழங்கப்படவுள்ளது. அதேபோல 5 ஆயிரத்து 246 ஆவணங்கள் எஞ்சியுள்ளன.
இந்தியாவில் இருந்து 11 ஆயிரத்து 780 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக 9 மாகாணங்களிலும் செயலணி உருவாக்கப்படும். இதன் முதற்கட்டமாக வடக்கில் ஆளுநர் தலைமையில் நிறுவப்பட்டுள்ளது.“ எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106