மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்லாசி வேண்டி பழைய கதிரேசன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு!
Saturday, December 3rd, 2022
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நல்லாசி வேண்டி பம்பலப்பிட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் பழைய கதிரேசன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளை நடத்தியுள்ளனர்..
சர்வதேச இந்துமத பீடத்தின் ஏற்பாட்டில் ஆலய தர்மகர்த்தா இராஜேந்திர செட்டியார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.
கெளரவ அதிதியாக இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் வை.அனிருத், முன்னாள் ஜனாதிபதியின் இந்து சமய விவகார இணைப்பாளர் கலாநிதி இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் அரசியல் பிரமுகர்கள், சமயத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சமய வழிபாட்டில் கலந்து கொண்டதன்பின் ஆலய நிர்வாகத்தினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர். ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பூஜை வழிபாடுகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106