பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான செயற்பாட்டுத் திட்டம் நாடு முழுவதும் முன்னெடுப்பு!

Saturday, December 3rd, 2022

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாள்கள் செயற்பாட்டுத் திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அதனடிப்படையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் வலி. மேற்கு பிரதேச சபையினரால் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது போதைவஸ்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் குறித்த தரப்பினர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறையவேண்டும் என்றால் போதைவஸ்து ஒழிக்கப்பட வேண்டும். போதையை ஒழித்தால் பெண்கள் மற்றும் சிறுவவர்களுக்கு எதிரான வன்முறைகள் தானாகவே இல்லாமல் போய்விடும் என வலியுறுத்தியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106