புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை நிறுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
Wednesday, November 30th, 2022
இலங்கையில் பல இலட்சங்களை செலவழித்து படித்து வெளிநாடு செல்லும் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்கள் குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு மாணவர்கள் வெளிநாடு செல்லும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி ஏதாவது விடை காண வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தங்கியிருந்து மருத்துவ படிப்பை முடிக்கவே மாணவன் ஒருவருக்கு இலங்கை அரசாங்கம் அறுபது இலட்சம் ரூபாய் செலவழிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு பயிற்சி பெற்று வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்த நாடுகள் எமக்கு வழங்கும் உதவிகளை விட அந்த நாடுகளுக்கு நாம் செய்யும் உதவிகளே அதிகம் என தெரிவித்தார்.
எனவே எவ்வாறான அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் இந்த பிரச்சினை பாதிக்கும் எனவும் இந்த பிரச்சினைக்கான பதிலை நாம் காண வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106