இலங்கை பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துகை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவிகள் வழங்கப்படும் – சீனா அறிவிப்பு!

Tuesday, November 29th, 2022

இலங்கை பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துகை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவிகள் வழங்கப்படும் என  சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சு ஊடகப் பேச்சாளர் ஸாவோ லிஜியான் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“இலங்கை எதிர்நோக்கி வரும் கடன் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்.

அந்தவகையில் சீனாவின் இயலுமைக்கு ஏற்ற வகையில் ச இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு உதவிகளை வழங்கத் தயாராக சீனா இருக்கின்றது

இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர், அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

இரு நாடுகளுக்கும் இடையிலான மரபு ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106