உயர்தர மாணவர்களுக்கு நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பு – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, November 29th, 2022

பாடசாலைக்கு வருவதில் சிரமங்களை எதிர்நோக்கும் உயர்தர மாணவர்களுக்காக சில நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு நேற்று விடுத்துள்ள விசேட அறிவிப்பில், 2023 ஆம் ஆண்டு முதல் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 80 வீத பாடசாலை வருகை கட்டாயம் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பாடத்திட்டத்தை உள்ளடக்க பாடசாலைக்கு மாணவர்களை வரவழைக்க 80வீத வருகைப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த காலங்களில் கொரோனா பரவலின்போதும் போராட்டங்களின்போதும் போக்குவரத்து சிரமம் போன்ற காரணங்களால் பாடசாலைக்கு வருவதற்கு சிரமப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு நிவாரணத் திட்டம் அமைக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சருக்குத் தெரிவிக்கிறோம். அதற்கு அவர் சாதகமாக பதில் அளிப்பார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106