பெல்ஜியத்தை வீழ்த்தி மொராக்கோ அபார வெற்றி!

Monday, November 28th, 2022

உலகக் கிண்ண கால்பந்து போட்டி 1930 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த 22ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டி கடந்த 20 ஆம் திகதி கட்டாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் இன்று இடம்பெற்ற குரூப் எப் பிரிவு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம், மொராக்கோ அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆனாலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 0-0 என்ற சமனிலையில் இருந்தன.

இரண்டாவது பாதியின் 73ஆவது நிமிடத்தில் மொராக்கோ அணியின் அப்தெல் ஹமீது சபிரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

ஆட்டத்தின் 92ஆவது நிமிடத்தில் சகாரியா அபுக்லால் ஒரு கோல் அடித்தார். இறுதியில், மொராக்கோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த பெல்ஜியத்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

இதன்மூலம் குரூப் எப் பிரிவு புள்ளிப்பட்டியலில் மொராக்கோ 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பெல்ஜியம் 3 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106