ஆர்ஜன்டினா அணி முதல் வெற்றியை பதிவு செய்தது – பிரான்ஸ் இரண்டாம் சுற்றுக்கு தகுதி!

Sunday, November 27th, 2022

ஃபிபா உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரில் மெக்ஸிக்கோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ஜன்டினா அணி 2 க்கு பூச்சியம் என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் 64 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டினா அணியின் லயனல் மெஸ்ஸி கோல் ஒன்றை அடித்தார்.

அவரை தொடர்ந்து என்சோ பெர்னாண்டஸ் 87 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்தார்.

இதேவேளை, குழு “டி” பிரிவில் பிரான்ஸ் மற்றும் டென்மார்க் ஆகிய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் பிரான்ஸ் அணி 2 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே 61 ஆம் மற்றும் 86 ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்தார்.

டென்மார்க் அணியின் எண்ட்ரேயஸ் கிறிஸ்டென்சன் 68வது நிமிடத்தில் கோல் ஒன்றை பெற்றார்.

ஸ்டேடியம் 974 விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற நடப்பு சம்பியன் பிரான்ஸ் முதலாவது அணியாக இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106