BPL செல்ல இலங்கையின் பதின்மூன்று பேர் தெரிவு – குசல் ஜனித் பெரேரா உள்ளடக்கம்!

Thursday, November 24th, 2022

பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரின் ஒன்பதாவது கட்ட போட்டிகளுக்கான வீரர்கள் வரைவு பட்டியலில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பலர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்களில் கடந்த சில காலமாக உபாதை காரணமாக ஓய்வில் இருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேராவும் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.

இந்த வீரர்கள் தெரிவு செய்யப்படுவதற்கு முன்பு, பல இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பங்களாதேஷ் பிரீமியர் லீக் அணி உரிமையாளர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி முதல் பெப்ரவரி 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் (BPL) 07 அணிகள் இதில் பங்குபற்றவுள்ளன.

இதன்படி, BPL போட்டிகளுக்காக, சட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணிக்காக விஷ்வ பெர்னாண்டோ மற்றும் அஷான் பிரியஞ்சன், டாக்கா டொமினேட்டர்ஸ் அணிக்காக சாமிக கருணாரத்ன மற்றும் டில்ஷான் முனவீர, குல்னா டைகர்ஸ் அணிக்காக அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் தசுன் ஷானக்க, ரங்புர் ரைடர்ஸ் அணிக்காக ஜெஃப்ரி வான்டர்சே மற்றும் பெத்தும் நிஷங்க ஆகியோரும், கமிது மெண்டிஸ், திசர பெரேரா மற்றும் தனஞ்ஜய டி சில்வா ஆகியோர் சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளனர்.

இதேவேளை, ஃபார்ச்சூன் பரிசால் அணிக்காக இலங்கை அணி வீரர்களான குசல் ஜனித் பெரேரா மற்றும் சத்துரங்க டி சில்வா ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106