மேலும் பல பொருட்களின் விலையை குறைத்தது சதொச!

Thursday, November 24th, 2022

லங்கா சதொச பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதனடிப்படையில் இன்று 24 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 229 ரூபாவாகவும், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 265 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளைப்பூண்டின் விலை 495 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.

அத்துடன், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 255 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் வழங்குமாறு நீதி அமைச்சு கோரிக்கை!
இன்றுமுதல் பெப்ரவரி 04 ஆம் திகதி வரை தினசரி மின்வெட்டு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை - கு...
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய கடன் - எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் ...