நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்சாவை தாக்க முயற்சி – ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை சபையில் இருந்து வெளியேற்றினார் சபாநாயகர்!

Wednesday, November 23rd, 2022

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை சபையில் இருந்து வெளியேறுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் அவரை சபையில் இருந்து வெளியேறுமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்சாவை தாக்குவதற்கு முயற்சித்ததாக குற்றம் சுமத்தியே சபாநாயகர் இந்த தீர்மானத்தை அறிவித்தார்.

இதன்படி சமிந்த விஜேசிறி இன்றைய முழு நாள் விவாத நிகழ்வில் பங்கேற்க முடியாது என்று சபாநாயகர் அறிவித்தார்.

உள்ளுராட்சி தேர்தலை பிற்போடும் திட்டம் இருப்பதாக கூறி நாடாளுமன்றில் இன்று வாதவிவாதங்கள் இடம்பெற்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது, உள்ளுராட்சி தேர்தலை பிற்போடும் திட்டம் இல்லையென்றும், எனினும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என்று நிமால் லான்சா தெரிவித்ததன் பின்னரே, அவரை சமிந்த விஜேசிறி தாக்குவதற்கு முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106