உலகக் கிண்ண கால்பந்தில் முதல் அதிர்ச்சி!

Wednesday, November 23rd, 2022

கட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஆர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா, முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் சர்வதேச தரப்படுத்தலில் 3 ஆவது இடத்திலுள்ள ஆர்ஜென்டினாவும் 51 ஆவது இடத்திலுள்ள சவுதி அரேபியாவும் இன்று பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

இந்தப் போட்டியின் முதல் பாதியில் 10 ஆவது நிமிடத்தில் கிடைத்த பனால்ட்டி வாய்ப்பை கோலாக்கிய ஆர்ஜென்டினா, முதல் பாதியில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆர்ஜென்டினா போட்ட மூன்று கோல்கள் விதிமுறைகளை மீறியது என்ற அடிப்படையில் நடுவரால் நிராகரிக்கப்பட்டிருந்தன.

எனினும் இரண்டாவது பாதியில் சுதாகரித்து விளையாடிய சவுதி அரேபியா 48 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றைப் போட்டு, கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியது.

தொடர்ந்தும் சிறப்பாக விளையாடிய சவுதி அரேபியா 53 ஆவது நிமிடத்தில் மற்றுமொரு கோலைப் போட்டு, ஆர்ஜென்டினாவிற்கு அதிர்ச்சி அளித்து.

இதன்பிரகாரம் 2 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் சவுதி அரேபியா முன்னிலை பெற்றிருந்த நிலையில், இறுதி வரை மேலதிக கோலை போடும் ஆர்ஜென்டினா அணியின் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

போட்டியின் இறுதியில் 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற சவுதி அரேபிய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் மெக்சிக்கோ மற்றும் போலந்து ஆகிய அணிகளுடனான ஆட்டங்கள் ஆர்ஜென்டினா அணிக்கு தீர்மானமிக்கவையாக மாறியுள்ளமை குறப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106