அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் – தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வு காண முடியும் தமிழர் என்கின்றார் அமைச்சர் மஹிந்த அமரவீர!
Friday, November 18th, 2022
முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் உள்ள இந்த அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கு தமிழ் அரசியல் தரப்பினர் அவநம்பிக்கையை துறந்து ஒருசில விடயங்களில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பல ஆண்டு காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் கூட்டமைப்பும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றார்.
நாட்டின் தேசிய பிரச்சினையாகவுள்ள தமிழ் மக்களின் பிரச்சசினைகளுக்கு இந்த அரசில் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண முடியும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106