யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள் – அச்சத்தில் மக்கள்!
Tuesday, November 15th, 2022
யாழ்ப்பாணம் கோண்டாவிலில் வீடொன்றை உடைத்து நகை, பணம் மற்றும் அலைபேசியைத் திருடிய ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று உரும்பிராய் பகுதியில் வைத்து வவுனியாவைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். என்று பொலிஸார் கூறினர்.
சந்தேக நபரிடமிருந்து 21/2 தங்கப் பவுண் சங்கிலி, 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான அலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
ஓகஸ்ட் 25ஆம் திகதி கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து திருட்டு இடம்பெற்றமை தொடர்பில் வீட்டில் வசிப்பவரினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜிபிஎஸ் ஒழுங்கையில் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே பெண்ணை வீதியில் மறித்து இந்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வழிப்பறி தொடர்பான சிசிரிவி பதிவு காணொளி விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது.
சங்கிலி பறிகொடுத்த பெண் ஒவ்வொரு திங்கட்கிழமை ஆலயத்துக்கு வழிபடச் செல்பவர் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106