ஜனாதிபதியின் உரையை முன்னிட்டு நாடாளுமன்றில் பலத்த பாதுகாப்பு – பார்வையாளர் கூடம் தூதரக அதிகாரிகளுக்கு மட்டுமே திறக்கப்படும் என்றும் அறிவிப்பு!

Sunday, November 13th, 2022

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றவுள்ளார்.

இதனை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறைகள் உட்பட நாடாளுமன்ற கட்டட தொகுதி முழுவதும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதேவேளை நாளையதினம் பார்வையாளர் கூடம் தூதரக அதிகாரிகளுக்கு மட்டுமே திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த தினத்தில் அப்பகுதியில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னைய வருடங்களைப் போன்றே இம்முறையும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106