மாணவர்களுக்கான பகலுணவு திட்டத்தை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை – நாடாளுமன்றில் கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, November 12th, 2022

பாடசாலை மாணவர்களுக்கு வழமை போன்று தேவையான அளவு உணவு தற்போது கிடைப்பதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்

அத்துடன், 11 இலட்சம் மாணவர்களுக்கு பகல் உணவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

தற்போதும் சில பகுதியிலுள்ள மாணவர்களுக்கு பகலுணவு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர், மாணவர்களுக்கு பகலுணவு வழங்குவதற்காக நிதியம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் பகலுணவு திட்டத்திற்காக அமைக்கப்படுகின்ற நிதியத்தின் ஊடாக உணவு வழங்கும் நடவடிக்கையை இரு மடங்காக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106