இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி அணிகள் தெரிவு – நாட்டை வந்தடைந்தது இலங்கை அணி!
Monday, November 7th, 2022
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு 4 ஆவது அணியாக பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.
அதற்கமைய, இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி மோதவுள்ள நான்கு அணிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
தென் ஆபிரிக்க அணி நெதர்லாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்ததையடுத்து, அரையிறுதிக்கான வாய்ப்பை தவறவிட்டது.
அந்த அணியின் வெளியேற்றம் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிக்கு அரையிறுதிக்கான வாய்ப்பை வழங்கியது.
இந்த நிலையில், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், 5 விக்கெட்டுக்களால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
அதற்கமைய, குழு 1இல் இருந்து நியூசிலாந்தும் இங்கிலாந்தும், குழு 2 இல் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
எவ்வாறாயினும், இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதிப் போட்டியின் இறுதி அட்டவணையை இந்தியா – ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவு தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
இருபதுக்கு 20 உலக கிண்ணம் தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை குழாம் இன்று மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளது.
இன்று காலை 8.27 க்கு ஈ.கே – 650 என்ற விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடரில் கலந்து கொண்ட இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது. இதனையடுத்து, இலங்கை அணி இன்று நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106