தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Sunday, November 6th, 2022

நாட்டில் எதிர்வரும் 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய முறையில் எரிபொருள் கொள்வனவு செய்யப்படாமை காரணமாகவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே

எரிபொருள் விலை குறைவடையும் என எதிர்பார்த்து எரிபொருளை ஓடர் செய்யாத எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு தண்டனையாக 03 நாட்களுக்கு எரிபொருளை வழங்குவதில்லை என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்ததோடு, சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகளும் காணப்பட்டன.

இந்த தண்டனை நடவடிக்கை காரணமாக வாடிக்கையாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் தீர்மானங்களே இந்த நிலைமையை உருவாக்கியதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106