வேலணைபிரதேச பயனாளிகளுக்கான உதவித்திட்டங்களை டக்ளஸ் தேவானந்தா கையளிப்பு!
Monday, August 29th, 2016
இவ் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் பிரகாரம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வேலணை பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உதவித்திட்டங்கள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டன.
இன்றையதினம் (29) காலை வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற குறித்த உதவி வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகள், சனசமூக நிலையங்கள் மற்றும் பாலர் பாடசாலைகளுக்கான உதவித்திட்டங்களை வழங்கிவைத்தார்.





Related posts:
சொல்லுவதை செய்கின்றவர் - செய்வதை சொல்லுகின்றவருக்கு 63 ஆவது பிறந்த நாள்
கிளியூரான் விளையாட்டுக் கழகத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மைதான ஏற்பாடு !
வடமராட்சியில் நன்னீர் வேளாண்மையை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
|
|
|


