எதிர்க் கட்சியின் பிரதிநிதிகள் நியமிக்கப்படாமையால் துறைசார் மேற்பார்வைக் குழுக்களை செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதியின் கடிதத்திற்கு சபாநாயகர் பதில்!

Friday, November 4th, 2022

எதிர்க் கட்சியின் பிரதிநிதிகள் நியமிக்கப்படாமையால் துறைசார் மேற்பார்வைக் குழுக்களை செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அதற்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துறைசார் மேற்பார்வை குழுக்களை செயற்படுத்துவதற்கு அண்மையில் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதன் பிரகாரம் 17 துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டன.

அடுத்த வாரம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வின் பின்னர் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பிலான தீர்மானத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

பரிந்துரைகளுக்கு அமைய 17 நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டியுள்ள நிலையில் அவற்றுக்கான தலைவர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபாநாயகருக்கு நேற்று (03) எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

நீண்டகால முறைமை மாற்றங்களை கொண்டுவருவதற்கான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் நாடாளுமன்றத்தில் தாமதம் காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106