யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை – உருவாக்கப்பட்டது விசேட குழு !

Tuesday, November 1st, 2022

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்பாடு தற்போது பாரிய சமூகப் பிரச்சினையாக உருவாகி வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக யாழ். குடாநாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.

போதைப்பொருள் பாவனை காரணமாக எதிர்ப்பு சக்தி குறைவடைந்து ஈரல், இதயம் போன்றவற்றில் ஏற்படும் அழற்சியால் அண்மைக்காலமாக பல உயிரிழப்புகளும் சம்பவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை குறைக்க விசேட படைப்பிரிவானது உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106