கிளிநொச்சியில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை !

Tuesday, November 1st, 2022

கிளிநொச்சியில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டம் கிளிநொச்சியில் அமைந்துள்ள திறன் விருத்தி வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமானது.

நேற்று திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுதன தெடர்ச்சியாக இன்றையதினம் இரண்டவது நாளாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந் நடமாடும் சேவையில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு  அமைச்சர் கலாநிதி விஜயதாஷ ராஜபக்ஷ, அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் குமாரி, இழப்பீடுகளுக்கான பணிப்பாளர் நாயகம் எஸ்.எல்.எம். ஹசீம் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், துறை சார் அதிகாரிகள், நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகள் , பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

குறித்த நடமாடும் சேவையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு,பாதுகாப்பு அமைச்சு,வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,பதிவாளர் நாயகம் திணைக்களம்,ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம்,இழப்பீட்டுக்கான அலுவலகம்,காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்,மாகாண காணி ஆணையாளர் நாயகம் ஆகிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றிருந்தது.

மேலும், பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பெற்றுக் கொள்ளல் , பிரஜாவுரிமை சான்றிதழ் பெற்றுக் கொள்ளல் , இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களுக்கான காணித்தேவை மற்றும் காணி உரிமை பிரச்சினைகள் ,வன்முறையால் பாதிக்கப்பட்ட சொத்து மற்றும் உயிரிழப்பு காயத்திற்கான நட்டஈடு பெற்றுக் கொள்ளல் ,தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளல்,இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினூடாக ஏற்கனவே அனுப்பப்பட்ட கோவைகளை பூரணப்படுத்தல் தொடர்பான சேவைகளும் நடைபெற்றது.

அத்துடன் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவு, இறப்பு , காயமடைந்தவர்களுக்கான கொடுப்பனவு, அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவு ஆகியனவும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106