திடீர் திருப்பத்துக்குள்ளாகிய உக்ரைன் – ரஸ்யா போர். – புடின் உட்பட மொத்த ரஸ்யாவும் தயார் எனவும் அறிவிப்பு!
Monday, October 31st, 2022
உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், பல மாதங்களாக நீடித்த மோதலை தீர்க்கவும் ரஸ்யா தயாராக இருப்பதாக ரஸ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஸ்யா இடையிலான போர் நடவடிக்கையானது 250 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், போர் நடவடிக்கை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், பல மாதங்களாக நீடித்த மோதலை தீர்க்கவும் ரஸ்யா தயார் நிலையில் இருப்பதாக ரஸ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் பேச்சுவார்த்தைகளுக்கு அதிபர் புடின் உட்பட மொத்த ரஸ்யாவும் தயார் நிலையில் மாறாமல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் எங்களது மேற்கத்திய பங்காளிகள் பதட்டங்களை குறைக்க என்ன முன்மொழிவுகளை தெரிவிக்க உள்ளனர் என்பதை கேட்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஸ்யா இடையிலான போர் அமைதி பேச்சுவார்த்தை குறித்து சில வாரங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்து இருந்த உக்ரைனிய அதிபர் ஜெலென்ஸ்கி,
“ரஸ்யாவுடன் பேச்சு வார்த்தைகளை திறக்கும் ஒரே வழி, விளாடிமிர் புடின் அவரது ரஸ்ய அதிபர் பதவியில் இல்லை என்றால் மட்டுமே மேற்கொள்ளப்படும்”என தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106