பகிடிவதையால் மாணவன் உயிரிழப்பு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Saturday, October 29th, 2022

பேராதனை பல்கலைக்கழகத்தில் 1997 ஆம் ஆண்டில் பொறியியல் பீட மாணவராக இருந்த செல்வநாயகம் வரபிரகாஷை கொலை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

பிரதான சந்தேகநபரான பாலேந்திரன் பிரசாத் சதீஸ்கரனின் இருப்பிடம் தெரியாததால், அவரை கைது செய்ய பிடியாணை உத்தரவை பிறப்பித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட செல்வநாயகம் வரபிரகாஷ் அப்போது முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர், என்றும் அவர் மீது மனிதாபிமானமற்ற முறையில் பகிடிவதை மேற்கொள்ளப்பட்டதால் அவர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரேதப் பரிசோதனையின் போது, உடல் உழைப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட தசைக் காயம் காரணமாக ஏற்பட்ட கடுமையான சிறுநீரகச் செயலிழப்பு மரணத்திற்குக் காரணம் என நீதித்துறை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

மேலும் அவர் அதிக உடல் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டதன் காரணமாக உள் காயங்கள் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே குறித்த மாணவன் உயிரிழந்த என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106