நவம்பர் இறுதி வாரத்தில் க.பொ.த சா.த பரீட்சைக்கான பெறுபேறு வெளியாகும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
Friday, October 28th, 2022
இந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதியின் பின்னர், வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பரீட்சை விடைத்தாள்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை 3 ஆயிரத்து 844 மத்திய நிலையங்களில் இடம்பெற்றன.
இதற்காக ஐந்து லட்சத்து 17 ஆயிரத்து 486 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அதில் நான்கு இலட்சத்து 7 ஆயிரத்து 129 பரீட்சார்த்திகள் பாடசாலை விண்ணப்பதாரிகளாவர்.
அத்துடன் விஷேட தேவையுடை 590 மாணவரகள் 2021 கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தரப் பரீட்சைக்காக தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106