தேசிய மீனவர் மகா சமேளனத்தின் யாப்பு மறுசீரமைப்பு- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Tuesday, October 25th, 2022


….
தேசிய மீனவர் மகா சமேளனத்தின்  யாப்பினை மறுசீரமைப்பது தொடர்பான கலந்துரையாடல், குறித்த சம்மேளனத்தின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று இடம்பெற்றது.

சுமார் 15 வருடங்களுக்கு மேலாக குறித்த சமேளனத்தின் யாப்பு சீர்திருத்தம் செய்யப்படாத நிலையில், கால சூழல் மாற்றங்களுக்கு அமைய கடற்றொழில் சார் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில் யாப்பு சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய, மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்ற யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராயும் நோக்கில் இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, மற்றும் கடற்றொழில் திணைக்களம் உட்பட்ட கடற்றொழில்சார் திணைக்களங்களின் பிரதாணிகள், கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களின் மாவட்ட ரீதியான பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு, இதன்போது கருத்துக்களை தெரிவித்தனர். 25.10.2022



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106