பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Friday, October 21st, 2022

நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்கவினால் நடத்தப்பட்ட நேர்காணலிலேயே நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

வரி திருத்தங்கள், வட்டி விகித உயர்வு போன்றவை இவ்வாறு கடுமையாக எடுக்கப்பட்ட சில முடிவுகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, வரி சீர்திருத்தம் மற்றும் IMF செயன்முறை மூலம், எதிர்காலத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து முன்னேறுவதற்கு எங்களுக்கு ஏதாவது வழி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா என ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஆளுநர், கடந்த காலத்தில் சமூக மற்றும் அரசியல் அமைதியின்மை இருந்தது என்றும் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான வரிசைகள் இருந்தன என்றும் சுட்டிக்காட்டினார்.

அது வேலைத்திட்டத்தின் மூலம் தலைகீழாக மாறிவிட்டது என்றும் வரி மற்றும் நிதிக் கொள்கையில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வரிக் கொள்கையை ஓராண்டுக்கு அமுல்படுத்தினால், நாம் எதிர்பார்த்ததை விட வரி வருவாய் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிக வருமானம் உள்ளவர்கள் அதிகம் பங்களிப்பார்கள் என்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அதிக வருமானம் உள்ளவர்கள் பங்களித்தால் அனைவருக்கும் வரிச்சலுகை அளிக்கலாம் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106