கைதிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
Tuesday, October 18th, 2022
சிறைச்சாலைகளில் சிறைக்கைதிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்..
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் மோசடிகள் இடம்பெறுவதோடு, தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும் சிறைத்தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
உணவு தரம் குறித்து பரிசோதனைகளை மேற்கொள்ளும் தரப்பினரை வெலிக்கடை உள்ளிட்ட சிறைச்சாலைகளுக்கு அனுப்பி பரிசோதனைகளை மேற்கொண்டோம்.
அது மாத்திரமின்றி நுகர்வோர் விவகார அதிகார சபை உத்தியோகத்தர்களையும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் சென்று பரிசீலிக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தேன்.
இரு தரப்பினரும் வழங்கிய அறிக்கையின் பிரகாரம் சிறைக்கைதிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106