முத்தரப்பு ரி-20 தொடர்: பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி!

Wednesday, October 12th, 2022

நியூஸிலாந்து, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ரி-20 தொடரின், நான்காவது ரி-20 போட்டியில், நியூஸிலாந்து அணி 48 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில், நியூஸிலாந்து அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின.

இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியுசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் Devon Conway 64 ஓட்டங்களையும், Glenn Phillips 60 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 209 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 48 ஓட்டங்களினால்  தோல்வியடைந்துள்ளது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக Devon Conway தெரிவானார்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106